ADDED : ஜூலை 25, 2011 10:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் இயக்க மாநாடு நடந்தது.
சிக்ரி விஞ்ஞானி ரகுபதி தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் ராதா முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் பஞ்சுராஜ் வரவேற்றார். குணசேகரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சாஸ்தா சுந்தரம் அறிக்கை வாசித்தார். பேராசிரியர் ராஜேந்திரன், மாநில செயலாளர் சுப்பிரமணியன் பங்கேற்றனர். இயக்க புதிய நிர்வாகிகள் தேர்வில் மாவட்ட தலைவராக விஞ்ஞானி ரகுபதி, செயலாளராக சாஸ்தா சுந்தரம், பொருளாளராக அசோக்பாரதி, துணை தலைவர்களாக அமீர் பாதுஷா, அருள்சாமி, இசக்கியம்மாள், துணை செயலாளர்களாக அழகர்சாமி, ஜெயக்குமார், சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டனர். சமச்சீர்கல்வி, கிராபைட் ஆலை விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வம் நன்றி கூறினார்.