/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மனைவியை கொல்ல முயற்சி கணவர் கைது
/
மனைவியை கொல்ல முயற்சி கணவர் கைது
ADDED : ஜூலை 31, 2011 10:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி மாதவன் தெருவை சேர்ந்த ஆட்டோ டிவைர் முருகவேல் (29).
இவரது மனைவி சாந்தி. நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு சென்ற இவர், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து தகராறு செய்தார். ஆத்திரத்தில் கல்லை தூக்கி மனைவியின் தலையில் போட்டார். இதில், பலத்த காயமடைந்த சாந்தி காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன், முருகவேலை கைது செய்தார்.