/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தீயணைப்புத்துறையில் சிவகங்கைக்கு கோட்ட அந்தஸ்து
/
தீயணைப்புத்துறையில் சிவகங்கைக்கு கோட்ட அந்தஸ்து
ADDED : ஆக 25, 2011 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர் : திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு தனி கோட்ட அந்தஸ்து அளித்துள்ளதாக முதல்வர் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட தீயணைப்புத்துறை முன்னர் மதுரை கோட்டத்தில்இயங்கி வந்தது. கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை, ராமநாதபுரம்இணைந்து தனிக் கோட்டமாக பிரிக்கப்பட்டது. தற்போது சட்டசபையில் சிவகங்கையை தனிக் கோட்டமாக அறிவித்துள்ளார். அதன்படி சிவகங்கை, மானாமதுரை,காரைக்குடி, தேவகோட்டை, திருப்புத்தூர், சிங்கம்புணரி ஆகிய 6 நிலையங்கள் இக்கோட்டத்தின் கீழ் இயங்கும். இதற்கான கோட்ட அலுவலகம் சிவகங்கையில் இயங்கும்.