/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பயங்கரவாதத்திற்கு எதிராக காங்.,கையெழுத்து இயக்கம்
/
பயங்கரவாதத்திற்கு எதிராக காங்.,கையெழுத்து இயக்கம்
ADDED : செப் 08, 2011 10:34 PM
சிவகங்கை : பயங்கரவாதத்தை எதிர்த்து கருடா இயக்கத்தின் சார்பில் பிரச்சாரம்,கையெழுத்து இயக்கம் செப்.16 வரை நடக்கிறது.
சிவகங்கை வந்த பிரச்சார வாகனத்தை மாவட்ட தலைவர் பிரபாகரன் வரவேற்றார். முக்கிய இடங்களில் பிரச்சாரம்,பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. கருடா இயக்க மாநில தலைவர் நாதன் பேசுகையில் ,'' பயங்கர வாதத்தை எதிர்த்து 33 நாட்கள் பயணம், 31 மாவட்டத்தில் உள்ள பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் பயங்கரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறோம். மாநில அளவில் 500 பிரச்சார கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் கையெழுத்து வாங்குவது என்ற இலக்குடன் பயணத்தை துவங்கியுள்ளோம்.'' என்றார். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன், நகராட்சி தலைவர் நாகராஜன்,சண்முகராஜன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.