ADDED : செப் 11, 2011 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : சுற்றுலா துறை சார்பில், ராஜிவ் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடந்தது.
அழகப்பா அரசு கல்லூரி முதல்வர் அழகர்சாமி துவக்கி வைத்தார். ஈ.வே.ரா., சிலையில் துவங்கிய ஊர்வலம் புதிய பஸ் ஸ்டாண்ட் முன்பு நிறைவடைந்தது. மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சண்முகம், பள்ளி துணை ஆய்வாளர் ராஜதுரை பங்கேற்றனர். சுற்றுலா அலுவலர் ஜெயக்குமார், உதவி அலுவலர் அன்புரோஸ் ஏற்பாட்டை செய்திருந்தனர்.