ADDED : செப் 15, 2011 09:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர் : திருப்புத்தூரில் அண்ணாத்துரை பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க.,சார்பில் ஒன்றிய செயலர் ராமலிங்கம்,நகர் செயலர் அசோகன்,துணைச் செயலர் பிரேம்குமார், ஜெ.,பேரவை மாவட்ட இணைச் செயலர் சிவமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தி.மு.க., சார்பில் ஒன்றிய செயலர் செழியன், நகர் செயலர் கார்த்திகேயன்,பேரூராட்சி தலைவர் சாக்ளா,நகர் பொருளாளர் பிச்சைமுகமது,இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் நாராயணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பதிகண்ணன்,உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ம.தி.மு.க., சார்பில் மாவட்டச் செயலாளர் சே.செவந்தியப்பன், பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன்,மாவட்ட பிரதிநிதி முத்து, ஒன்றிய அவைத்தலைவர் ராமனாதன் , ஒன்றிய செயலர் தென்னவன், நகர் செயலர் ராஜ்மோகன்உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.