/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முன்மாதிரி வார்டாக மாற்றுவதே லட்சியம் : வேட்பாளர் மோகனசுந்தரம்
/
முன்மாதிரி வார்டாக மாற்றுவதே லட்சியம் : வேட்பாளர் மோகனசுந்தரம்
முன்மாதிரி வார்டாக மாற்றுவதே லட்சியம் : வேட்பாளர் மோகனசுந்தரம்
முன்மாதிரி வார்டாக மாற்றுவதே லட்சியம் : வேட்பாளர் மோகனசுந்தரம்
ADDED : செப் 30, 2011 01:16 AM
சிவகங்கை : சிவகங்கை 10 வது வார்டு அ.தி.மு.க.,வேட்பாளர் மோகனசுந்தரம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவர் கூறுகையில், '' சிவகங்கையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் 10 வது வார்டு மிக பின்தங்கிய பகுதியாகவே உள்ளது. இங்கு குடிநீர், கழிவுநீர் வாய்க்கால் பராமரிப்பு இல்லை. குப்பைகள்,தெருவிளக்கு உட்பட பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் குடியிருக்கும் நான் முதல்வர் ஜெ.,ஆதரவுடன் பொதுமக்களுக்கு வழங்கும் அனைத்து நலத்திட்டங்கள் கிடைக்க பாடுபடுவேன். தினமும் பொதுமக்களை சந்தித்து குறைகளை உடனுக்குடன் களையப்படும். கழிவு நீர் கால்வாய்களில் தண்ணீர் தேங்கி கொசுத்தொல்லை இன்றி சீரமைப்பேன் என்றார்.