/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காவிரி நீர் கிடைக்க பாடுபடுவேன் : தே.மு.தி.க., வேட்பாளர் எஸ்.கார்த்திகேயன்
/
காவிரி நீர் கிடைக்க பாடுபடுவேன் : தே.மு.தி.க., வேட்பாளர் எஸ்.கார்த்திகேயன்
காவிரி நீர் கிடைக்க பாடுபடுவேன் : தே.மு.தி.க., வேட்பாளர் எஸ்.கார்த்திகேயன்
காவிரி நீர் கிடைக்க பாடுபடுவேன் : தே.மு.தி.க., வேட்பாளர் எஸ்.கார்த்திகேயன்
ADDED : செப் 30, 2011 01:16 AM
சிவகங்கை : ''என்னை மாவட்ட கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்தால், அரசனூர், திருமாஞ்சோலை க்கு காவிரி நீர்,விவசாயிகளுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க பாடுபடுவேன்,'' என, தே.மு.தி.க.,மாவட்ட கவுன்சில் வேட்பாளர் எஸ்.கார்த்திகேயன் தெரிவித்தார்.
சிவகங்கை 11 வது வார்டு மாவட்ட கவுன்சிலுக்கு தே.மு.தி.க., சார்பில் மாவட்ட துணை செயலாளர் எஸ்.கார்த்திகேயன் மனு தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது: அரசனூர், முத்துப்பட்டி, வாணியங்குடி, கண்டனி, வந்தவாசி, திருமாஞ்சோலை, படமாத்தூர் உட்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. நான் வெற்றி பெற்றால் இப்பகுதி மக்களுக்காக காவிரி கூட்டு குடிநீர் கொண்டு வருவேன். இலந்தக்குடிபட்டி, சருகனேந்தல் உட்பட பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி செய்யப்படும்.
அரசனூர், திருமாஞ்சோலை, படமாத்தூர் உள்ளிட்ட இடங்களில் பஸ் ஸ்டாப்பிற்கென நவீன நிழற்குடை கட்டப்படும்.விவசாயிகள் வசிக்கும் இப்பகுதியில் அரசு சார்பில் கிடைக்கும் அனைத்து விவசாயம் சார்ந்த சலுகைகளையும் பெற்றுத்தருவேன்.அரசு மற்றும் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் பேசி கரும்பு விவசாயிகளுக்கு உரிய கொள்முதல் கிடைக்க பாடுபடுவேன். விவசாயிகளின் குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பதே என் லட்சியம். என்றார். மாவட்ட அவை தலைவர் சி.ஆர்.,பாலு, மாவட்ட தொழிற்சங்க பொருளாளர் சந்திரன், ஒன்றிய செயலாளர் மனோகரன், வக்கீல் அணி பிரசாத், பழனிச்சாமி, கேப்டன் பேரவை ஒன்றிய நிர்வாகி சண்முகம், மத்திய தொழிற்சங்க தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.