/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முள்வேலிக்குள் கழிப்பிடம் பெண்கள் அவதி
/
முள்வேலிக்குள் கழிப்பிடம் பெண்கள் அவதி
ADDED : ஆக 04, 2011 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்:மடப்புரத்தில் மகளிர் சுகாதார வளாகம் செயல்பாடின்றி உள்ளதால்,
பெண்கள், பக்தர்கள் அவதி அடைகின்றனர்.மடப்புரம் வைகை ஆற்றின் கரையில்
மகளிர் கழிப்பிடம் உள்ளது.
இங்கு, சில நாட்களுக்கு முன் மின் மோட்டார்,
கதவுகள் திருடுபோனது. இதனால், இவற்றை பாதுகாப்பதாக கூறி, கிராம ஊராட்சி
சார்பில் முள்வேலி அமைத்து, பயன்படுத்தமுடியாத நிலைக்கு
தள்ளிவிட்டனர்.இதனால், கோயிலுக்கு வரும் பெண் பக்தர்கள், கிராம பெண்கள்
பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எவ்வித பயன்பாடின்றி முள்வேலிகளால்
அடைபட்டு கிடக்கும், கழிப்பிடத்தை செப்பனிட்டு, பயன்பாட்டிற்கு
கொண்டுவரவேண்டும்.