sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசின் கெடுபிடிகளால்டிரைவிங் பள்ளிகள் மூடல்

/

அரசின் கெடுபிடிகளால்டிரைவிங் பள்ளிகள் மூடல்

அரசின் கெடுபிடிகளால்டிரைவிங் பள்ளிகள் மூடல்

அரசின் கெடுபிடிகளால்டிரைவிங் பள்ளிகள் மூடல்


ADDED : ஆக 04, 2011 11:49 PM

Google News

ADDED : ஆக 04, 2011 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:அரசின் புதிய விதிமுறைகளை கடைபிடிக்க முடியாமல் மாநில அளவில் டிரைவிங் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழக அரசு 2007ல் அமல்படுத்தப்பட்ட விதிமுறைகளை மாற்றி, மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப புதிய விதிமுறைகளை அறிவித்தது.விதிமுறைகள்: டிரைவிங் பயிற்சி பள்ளிகளில் ஆயிரம் சதுர அடியில் வகுப்பு அறை, அலுவலக அறை, பயிற்சி அறை, மோட்டார் பாகங்களுக்கு தனித்தனி அறை, கார், டூவிலர் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளில் முன்புறம் 350 சதுர அடியில் பார்க்கிங் வசதி, கனரக வாகன பயிற்சி பள்ளிகளில் 560 சதுர அடியில் பார்க்கிங் வசதி, பயிற்சி ஆசிரியர்கள் சென்னையில் உள்ள தரமணி, கும்மிடிப்பூண்டி, நாமக்கல்லில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும், உள்ளிட்ட விதிமுறைகளை அறிவித்து இருந்தது. இந்த விதிமுறைகளை கடைபிடிக்காத டிரைவிங் ஸ்கூல்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மாநில போக்குவரத்து ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.இதனை எதிர்த்து டிரைவிங் பயிற்சி பள்ளிகள் சார்பில் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது அந்த வழக்கில் விதிமுறை குறித்து அரசு விளக்கம் அளிக்கவும், அதுவரை (செப்.23 ம்தேதி) டிரைவிங் ஸ்கூல்களில் ஏற்கனவே உள்ள விதிமுறைகளில் மாற்றம் இல்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.

மாறி வரும் பொருளாதாரம் உள்ளிட்டவைகளால் டிரைவிங் ஸ்கூல்களை நடத்த முடியாமல் தவிக்கும் பல பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன. புதிய விதிமுறைகளை அரசு விதிப்பதற்கு முன் மாநில அளவில் ஆயிரத்து 350 க்கும் மேற்பட்ட டிரைவிங் பயிற்சி பள்ளிகள் செயல்பட்டன. பொருளாதார சூழ்நிலை, இட வாடகை, தொழில் போட்டி, பணியாளர் சம்பளம் உயர்வு, விதிமுறைகளின் மூலம் அரசு தரும் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் தற்போது ஆயிரத்து 263 பள்ளிகள் மட்டுமே செயல்படுகின்றன.குறைந்து வரும் பள்ளிகள்: அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மாநில அளவில் உள்ள சிலரால் மட்டுமே அமல்படுத்த முடியும். கூடுதல் முதலீடு ஆகும் என்பதால் சிறிய பள்ளிகளை மூட வேண்டிய நிலை தான் ஏற்படும் டிரைவிங் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us