ADDED : ஆக 05, 2011 10:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை:மானாமதுரை சட்டசபை தொகுதியில் வேட்பாளர்களின் நடவடிக்கையை வீடியோ
எடுக்க, வீடியோகிராபர்கள் நியமிக்கபப்ட்டனர்.
இதே பணியில் ஈடுபடும் மற்ற
தொகுதி வீடியோகிராபர்களுக்கு, நாள் சம்பளமாக கணக்கிட்டு வழங்கினர். ஆனால்,
மானாமதுரை தொகுதியில் பணியாற்றிய வீடியோகிராபர்களுக்கு, மணி நேரத்தை
கணக்கிட்டுள்ளனர். இதற்கான சம்பளத்தையும் தராமல் இழுத்தடித்தனர்.இதை
கண்டித்து, நேற்று மதியம் வீடியோகிராபர்கள் தாலுகா அலுவலகத்தை
முற்றுகையிட்டனர். இவர்களிடம், ஆர்.டி.ஓ., துர்கா மூர்த்தி, தாசில்தார்
நாகராஜன் பேச்சுவார்த்தை நடத்தினர்.