/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருதங்குடியில் நிலம் விற்பனை புகார் வாபஸ்
/
மருதங்குடியில் நிலம் விற்பனை புகார் வாபஸ்
ADDED : ஆக 14, 2011 10:46 PM
சிவகங்கை : திருப்புத்தூர் அருகே மருதங்குடியில் 120 சென்ட் நிலம் விற்பனை தொடர்பாக வக்கீல் அண்ணாமலை கூறியதாவது: சிவகங்கை நில அபகரிப்பு குற்றதடுப்பு பிரிவில், ஆக., 2 ல் அமுதவல்லி, நாராயணன், சத்தியசீலன், அர்ச்சுணன், ராஜாமணியம்மாள் ஆகியோர், தங்களது 120 சென்ட் நிலத்தை, காரைக்குடி துரைராஜ் மகன் கார்த்திகேயன், பள்ளத்தூர் படிக்காசு மகன் பாலசுப்பிரமணியன் போலியாக பட்டா மாறுதல் செய்ததாக, புகார் கொடுத்தனர்.
இது குறித்து ஆவணங்களை ஆய்வு செய்ததில், நால்வரின் உறவினரான சின்னையா மகன் ராஜேந்திரன் முறையாக பட்டா மாறுதல் செய்து, முறைப்படி கார்த்திகேயன், பாலசுப்பிரமணியனுக்கு விற்றுள்ளார். இதில் மோசடி எதுவும் இல்லை. இதனால், புகார் கொடுத்தவர்கள் வாபஸ் பெற்றுவிட்டனர்,என்றார்.