ADDED : செப் 03, 2011 12:36 AM
உள்ளாட்சி தேர்தல் அக்., 18ல் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் அக்., 26 உடன் முடிகிறது.
இப்பதவிக்கான தேர்தல், அக்டோபரில் நடைபெறும் என, சட்டசபையில் முதல்வர் ஜெ., அறிவித்தார். அதற்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, ஓட்டுப்பெட்டிகள் உட்பட தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டியுள்ளது.அக்.,18ல் தேர்தல்?: அண்ணாத்துரை பிறந்த நாளை முன்னிட்டு, செப்.,15ல் இலவச மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடுகள் வழங்கப்பட உள்ளன. அதனால் உள்ளாட்சி தேர்தல் தேதி அதற்கு முன் அறிவிக்கப்படமாட்டாது. அப்பணிகள் முடிந்தவுடன் செப்.,18ல் இத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும்.அக்.,18 முதல் 20க்குள் தேர்தல் நடக்கலாம் என தெரிகிறது.இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,''தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. செப்.,18ல் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். அக்.,18 முதல் 20க்குள் தேர்தல் நடக்கும் என, மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து தகவல் வந்துள்ளது,'' என்றார்.
நமது சிறப்பு நிருபர்