/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிமென்ட் விற்பனை நிறுத்தம் நடுத்தர வர்க்கத்தினர் பாதிப்பு
/
சிமென்ட் விற்பனை நிறுத்தம் நடுத்தர வர்க்கத்தினர் பாதிப்பு
சிமென்ட் விற்பனை நிறுத்தம் நடுத்தர வர்க்கத்தினர் பாதிப்பு
சிமென்ட் விற்பனை நிறுத்தம் நடுத்தர வர்க்கத்தினர் பாதிப்பு
ADDED : செப் 07, 2011 10:43 PM
சிவகங்கை : விற்பனை நிலையங்களின் மூலம் குறைந்த விலைக்கு சிமென்ட் விற்பது நிறுத்தப்பட்டுள்ளது.கடந்த ஆட்சியில் சிமென்ட், மணல்,கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் கட்டப்பணிகளை தொடர முடியாமல் பாதிக்கப்பட்டனர்.சிமென்ட் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து தமிழக அரசு நுகர்பொருள் வாணிப கிடங்குகளின் மூலம் குறைந்த விலையில் சிமென்ட் விற்க உத்தரவிட்டது. கட்டடம் கட்டுபவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் மூடை ஒன்றுக்கு 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இத்திட்டத்தில் சிமென்ட் கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கு முறையாக வழங்குவதில்லை. வெளிமார்க்கெட்டில் உள்ள தேவையை வைத்து அதிகாரிகளை கவனிப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் வழங்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.மாவட்டத்தில் சிமென்ட் கையிருப்பு இல்லாததால் அதிகாரிகள் சிமென்ட் வழங்குவதை நிறுத்தி விட்டனர். இதனால் நடுத்தர வர்க்கத்தினர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாவட்ட கலெக்டர் ராஜாராமன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.