/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மனுக்களை வாங்க அதிகாரிகள் மறுப்பு
/
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மனுக்களை வாங்க அதிகாரிகள் மறுப்பு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மனுக்களை வாங்க அதிகாரிகள் மறுப்பு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மனுக்களை வாங்க அதிகாரிகள் மறுப்பு
ADDED : செப் 21, 2011 11:12 PM
சிவகங்கை : உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிக்க புதிய வாக்காளர்களிடம் மனுக்கள் பெறுவதில் அதிகாரிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ள அறிக்கையில், சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த மார்ச் மாதம் 26 ம்தேதி வெளியிடப்பட்டது.
அதன் பின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் அக்.,24 ம் தேதி வெளியிடப்படும். பின்னர் இந்த பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, இடம் மாற்றம் செய்ய அக்., 24ம் முதல் நவ., 8 ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம். மனுக்கள் பரிசீலனை செய்து இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்தாண்டு ஜன.,5 ம்தேதி வெளியிடப்படும். இதில் சேர்க்கப்படும் புதிய வாக்காளர்கள் ஜன., 25ம்தேதிக்கு பின் தேர்தலில் ஓட்டளிக்கலாம், என அறிவித்துள்ளார்.ஆனாலும் விடுபட்ட, புதிய வாக்காளர்கள் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிக்கும் ஆர்வத்தில் தொடர்ந்து மனுக்களை தாலுகா, நகராட்சி அலுவலகங்களில் வழங்க வருகின்றனர். அதிகாரிகளோ அறிவிப்பு எதுவும் இல்லை எனக் கூறி இவர்களிடம் விண்ணப்பங்களை வாங்க மறுக்கின்றனர்.தேர்தல் அலுவலர் ஒருவர் கூறுகையில்,''புதிய வாக்காளர்கள் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிக்க விண்ணப்பம் செய்யலாம் என எந்த அதிகாரிகளுக்கும் உத்தரவு வரவில்லை. தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்கென தனிவாக்காளர் பட்டியலை வெளியிட முடியாது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது பற்றி மாவட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும். எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்பதால் மனுக்களை வாங்கவில்லை,'' என்றார்.