/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி துப்பாக்கிச் சூடு ஆர்.டி.ஓ.,விடம் சாட்சி அளிக்கலாம்
/
இளையான்குடி துப்பாக்கிச் சூடு ஆர்.டி.ஓ.,விடம் சாட்சி அளிக்கலாம்
இளையான்குடி துப்பாக்கிச் சூடு ஆர்.டி.ஓ.,விடம் சாட்சி அளிக்கலாம்
இளையான்குடி துப்பாக்கிச் சூடு ஆர்.டி.ஓ.,விடம் சாட்சி அளிக்கலாம்
ADDED : செப் 21, 2011 11:12 PM
சிவகங்கை : சிவகங்கை ஆர்.டி.ஓ., துர்காமூர்த்தி அறிக்கை: இளையான்குடியில் கடந்த செப்.11 அன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் கொண்டாட வந்த நபர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் சிவகங்கை டி.எஸ்.பி., இளங்கோ துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் காரைக்குடியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ஆனந்த் (16) காயமடைந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த ஆர்.டி.ஓ., நியமனம் செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி சூடு சம்பந்தமாக பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த கருத்துகளை செப்.23 முதல் 30 ம்தேதி வரை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வேலை நாட்களில் நேரில் தெரிவிக்கலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.