/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை டூ சிங்கப்பூரில் ‛வில்வித்தை சாதனை கண்ணை கட்டி வியப்பு தரும் மாணவர்
/
சிவகங்கை டூ சிங்கப்பூரில் ‛வில்வித்தை சாதனை கண்ணை கட்டி வியப்பு தரும் மாணவர்
சிவகங்கை டூ சிங்கப்பூரில் ‛வில்வித்தை சாதனை கண்ணை கட்டி வியப்பு தரும் மாணவர்
சிவகங்கை டூ சிங்கப்பூரில் ‛வில்வித்தை சாதனை கண்ணை கட்டி வியப்பு தரும் மாணவர்
ADDED : டிச 09, 2024 05:20 AM

சிவகங்கை: சிவகங்கையை சேர்ந்த மாணவர் கண்களை கட்டிக்கொண்டு வில்லில் இருந்து அம்பை 18 மீட்டர் துாரமுள்ள இலக்கில் எய்து சிங்கப்பூர் புக் ஆப் ரெக்கார்டு சாதனை படைத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே பெருங்குடி மணிவண்ணன் மகன் ரக்சித் நெவீன் 16. இவர் தற்போது சிங்கப்பூரில் 10ம் வகுப்பு படிக்கிறார். சிறுவயதிலேயே வில்வித்தை கற்பதில் ஆர்வத்தை செலுத்தினார்.
அவரது தந்தையே, ஆசானாக இருந்து மாணவருக்கு வில்வித்தை பயிற்சி அளித்து வந்தார். இவர் மட்டுமின்றி சிவகங்கை அருகே பெருங்குடி, சிங்கம்புணரி அருகே திருக்களாப்பூர், சிங்கப்பூரில் 53 பேர்களுக்கு வில்வித்தை பயிற்சி அளித்து வருகிறார்.
வில்வித்தையில் கைதேர்ந்த மாணவராக ரக்சித் நெவீன் விளங்கி வருகிறார். சிங்கப்பூரில் நடந்த சிங்கப்பூர் புக் ஆப் ரெக்கார்டு' நிகழ்ச்சியில் பங்கேற்று கண்களை கட்டிக்கொண்டு 18 மீட்டர் துாரமுள்ள இலக்கில் அம்பை எய்து சாதனை படைத்து, சிங்கப்பூர் விருதையும் பெற்றுள்ளார்.
அதே போன்று சிங்கம்புணரியில் சோழன் புக் ஆப் ரெக்கார்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற இம்மாணவர், அதே 18 மீட்டர் துார இலக்கை கண்களை மூடி வில்லில் இருந்து அம்பை எய்து சாதனை படைத்துள்ளார்.வில்வித்தையில் சாதனை:இது குறித்து மாணவர் ரக்சித் நெவீன் 16, கூறியதாவது, சிறு வயது முதலே தமிழரின் பாரம்பரிய விளையாட்டான வில்வித்தையில் சாதிக்கும் நோக்கில், பயிற்சி பெற்றேன்.
இதன் மூலம் கண்களை கட்டிக்கொண்டு வில்லில் இருந்து அம்பை எய்ததின் மூலம் இலக்கை எட்டி சாதனை படைத்தேன். இன்னும் பல சாதனைகள் புரிய முயற்சித்து வருகிறேன்.
மேலும், எந்த புத்தகத்தில் இருந்தும் ஒரு பக்கத்தை சொன்னால், அந்த பக்கத்தில் உள்ள தகவல்களை அப்படியே சொல்லிவிடும் திறனையும் வளர்த்துள்ளேன், என்றார்.