
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை அருகே தெக்கூர் கோமதி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் சிவானந்த மகோத்ஸவ விழா நடைபெற்றது.
நேற்று அதிகாலை பால், பன்னீர், சந்தனம், இளநீர், மஞ்சள், திரவிய பொடி, தயிர், தேன் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. ருத்ர ஹோமம், சிவ நாம சங்கீர்த்தனம், பாராயணம் மற்றும் சிறப்பு யாகம் நடந்தது. சிவாச்சாரியார் முத்து வடுகநாதன் தலைமை வகித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.