தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அழகப்பா பல்கலையில் திறன் மேம்பாட்டு பயிற்சி

 அழகப்பா பல்கலையில் திறன் மேம்பாட்டு பயிற்சி

 அழகப்பா பல்கலையில் திறன் மேம்பாட்டு பயிற்சி


ADDED : பிப் 18, 2026 07:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 07:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை இதழியல் மற்றும் மக்கள் தொடர்பு துறை, தொழில் முனைவோர், புத்தாக்கம் மற்றும் தொழில் மையம் சார்பில் ரூசா 2.0 நிதி உதவியுடன் பத்திரிக்கையில் வலையொலி மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை தொடக்க விழா நடந்தது.

துணைவேந்தர் ரவி தலைமையேற்று பேசினார். இதழியல் மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் பல்கலை ஏ.யு., வலையொலி மற்றும் ஏ. யு. படப்பிடிப்பு கூடம் ஆகியவற்றை துணைவேந்தர் ரவி தொடங்கி வைத்தார். ரூசா திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், நிதி அலுவலர் சந்திரமோகன் வாழ்த்தினர். திருச்சி புனித வளனார் கல்லூரி காட்சி தொடர்பியல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் தமிழரசி பேசினார். உதவி பயிற்றுநர் ஹரிபாஸ்கர் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us