/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை வாரச்சந்தையில் சின்ன பாகற்காய் ரூ.400
/
மானாமதுரை வாரச்சந்தையில் சின்ன பாகற்காய் ரூ.400
ADDED : ஜூலை 10, 2025 10:54 PM

மானாமதுரை; மானாமதுரை வாரச்சந்தையில் சின்ன பாகற்காய் ஒரு கிலோ ரூ.400க்கும், ஆந்திர நாவல் பழம் ஒரு கிலோ ரூ. 200க்கும் விற்பனையானது.
மானாமதுரையில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். மதுரை,திருப்புவனம், திருப்பாச்சேத்தி,சிவகங்கை,இளையான்குடி, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் வந்து பல்வேறு பொருட்களை விற்பனை செய்வர். நேற்று நடைபெற்ற சந்தையில் சின்ன பாகற்காய் ஒரு கிலோ ரூ. 400க்கு விற்பனையானது.கடந்த சில வாரங்களுக்கு முன்பு 5 கிலோ தக்காளி ரூ. 100க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் 3 கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. கத்தரிக்காய் ரூ.30-, சின்ன வெங்காயம் 50, பெரிய வெங்காயம் 2 கிலோ 50, பச்சை மிளகாய், முள்ளங்கி, கேரட், அவரை 80, காலி பிளவர் சிறியது 30, பெரியது 40க்கு விற்பனையானது. வியாபாரிகள் கூறியதாவது:
கொடியில் காய்க்கக்கூடிய சின்ன பாகற்காய் தற்போது அடிக்கும் வெயிலின் உக்கிரத்தால் காய்ந்து வருகின்றன.
இதனால் சின்ன பாகற்காய் விளைச்சல் மிகவும் குறைவாக இருப்பதால் விலை உயர்ந்துள்ளது என்றனர்.

