/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கருவேல மர காட்டிற்கு தீ; நகரைச் சூழ்ந்த புகை
/
கருவேல மர காட்டிற்கு தீ; நகரைச் சூழ்ந்த புகை
ADDED : ஜூலை 10, 2025 10:56 PM

திருப்புவனம்; திருப்புவனம் சேதுபதி நகரில் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கருவேல மர காட்டிற்கு சிலர்  தீ வைத்ததால்  இரண்டு மணி நேரம் புகை மூட்டத்தால் பொதுமக்கள் தவித்தனர்.
திருப்புவனம் மருதுபாண்டியர் திருமண மகால் அருகே கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளது.
கருவேல மரங்கள், நாணல் அடர்ந்து காணப்படுகிறது. இதனை ஒட்டி மின்மயமாக்கப்பட்ட மதுரை- - ராமேஸ்வரம் அகல ரயில் பாதையும் உள்ளது.  நேற்று முன்தினம் மாலை சிலர் நாணல்களுக்கு தீ வைத்தனர்.
கோடை வெயில் காரணமாக காய்ந்த மரங்கள் இருந்ததால் மளமள வென தீ பரவியது.அடர்த்தியான புகை எழுந்து நகரை சூழ்ந்தது.   வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேறினர். மானாமதுரை தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

