ADDED : டிச 17, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தலில் நேற்று ரேஷன் கடைக்குள் பாம்பு புகுந்தது. லாடனேந்தலில் முழு நேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.
நேற்று காலை 11:30 மணிக்கு ரேஷன் கடையை விற்பனையாளர் அண்ணாதுரை திறந்து மக்களுக்கு பொருட்கள் விநியோகித்து கொண்டிருந்தார்.
அப்போது சாரைப்பாம்பு அரிசி மூடைக்குள் பதுங்குவதை கண்டு மக்கள் அலறியபடியே ஓடினர். மானாமதுரை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் அரிசி மூடைகளை அப்புறப்படுத்தி பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.

