ADDED : ஜூலை 04, 2026 05:51 AM
தேவகோட்டை: கண்மாய் கரையை வெட்டி மண்ணை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
தேவகோட்டை தாலுகா கற் களத்துார் மருத வயலில் பொதுப் பணித்துறை கண்மாய் உள்ளது. இக்கண்மாய் ரூ. 75 லட்சம் மதிப்பில் கலுங்கு கள் கட்டி கண்மாய் கரை உயர்த்தப்பட்டு கண்மாய் துார் வாரப்பட்டது. இந்நிலையில் புதுப்பிக்கப்பட்ட கண்மாய் கரையை வெட்டி மண் கடத்தி விற்கப்பட்டது.
ஏப். 3 ந்தேதி பொது பணித்துறை அதிகாரிகளுக்கு கிராமத்தினர் புகார் செய்தனர். பொ.ப. துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கண்மாயை ஆய்வு செய்து போலீஸ் ஸ்டே ஷனில் புகார் செய்தனர். கற்களத்துார் வி.ஏ.ஓ. அன்பு கடந்த வாரம் தாலுகா போலீசில் புகார் செய்தார்.
கண்மாயை வெட்டி சேதப் படுத்தியதாக சிலாமேகநாடு கிராமத்தைச் சேர்ந்த அருள் ஆனந்த் ராஜா 40., என தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து நேற்று மாலை அருள் ஆனந்த் ராஜாவை கைது செய்து திருட்டுக்கு பயன்படுத்திய இயந்திரம், ஒரு டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
