ADDED : அக் 05, 2025 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : திருப்புத்துாரில் மின் பகிர்மான துறையினர் சார்பில் பிரதம மந்திரியின் வீட்டு கூரை சோலார் மின் திட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
மாவட்ட மேற்பார்வை பொறியாளர் ஆதிலெட்சுமி தலைமை வகித்தார். செயற்பொறியாளர் ஜான் எப் கென்னடி, உதவி செயற் பொறியாளர் சாத்தப்பன் முன்னிலை வகித்தனர்.
திட்டத்தின் விபரங்கள், விண்ணப்பிக்கும் முறை, மான்யம் விபரங்கள் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது.
பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. பி.ஆர்.ஓ. சண்முகநாதன், ஏ.இ., மல்லிகாராஜா, மற்றும் மின்துறை அலுவலர்கள்,மின் நுகர்வோர், வணிக, வர்த்தக சங்க நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.