/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மத்திய அரசு நிதி உதவியுடன் வீட்டிற்கு சோலார் அமைக்கும் திட்டம்
/
மத்திய அரசு நிதி உதவியுடன் வீட்டிற்கு சோலார் அமைக்கும் திட்டம்
மத்திய அரசு நிதி உதவியுடன் வீட்டிற்கு சோலார் அமைக்கும் திட்டம்
மத்திய அரசு நிதி உதவியுடன் வீட்டிற்கு சோலார் அமைக்கும் திட்டம்
ADDED : அக் 02, 2025 03:40 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட மக்கள் தங்கள் வீட்டிற்கு சோலார் பேனல் அமைக்க மத்திய அரசு நிதி உதவி பெற்று பயன் பெறலாம் என்று சிவகங்கை மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஆதிலட்சுமி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பிரதம மந்திரியின் வீட்டு சூரிய கூரை மின்சார திட்டம் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து வீட்டு உரிமையாளர்களும் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு 1 கிலோ வாட்டுக்கு ரூ.30 ஆயிரம் மானியம், 2 கிலோ வாட்டுக்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் ரூ.78 ஆயிரம் மானியம் வழங்குகிறது.
இந்த மானியம் நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற 7 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் செலுத்தப்படும். சூரிய ஒளி தகடு பொருத்துவதற்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வாட் சூரிய தகடு ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட்கள் வரை மின்சாரம்உற்பத்தி செய்வதால் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பயனீட்டின் அளவு 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் மின் பயனீட்டாளர்கள் தங்களது வீட்டில் சோலார் கூரை அமைக்க தேவைப்படும் முதலீடை எவ்வித பராமரிப்பு செலவுமின்றி குறுகிய காலத்தில் பெறலாம்.
இது தொடர்பாக மானாமதுரை, திருப்பத்துார், கோட்டங்களில் அக்.4 அன்றும், சிவகங்கை, காரைக்குடி கோட்டங்களில் அக்.6 அன்றும் கோட்ட அளவில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெறும். மின் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு பயன் அடையலாம் என்றார்.