/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை ராம் நகரில் செயலிழந்த சோலார் விளக்கு
/
மானாமதுரை ராம் நகரில் செயலிழந்த சோலார் விளக்கு
ADDED : டிச 12, 2025 05:35 AM
மானாமதுரை: மானாமதுரை ராம் நகரில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான சோலார் விளக்குகள் செயலிழந்ததால் இருட்டில் மக்கள் சிரமப்படுகின்றனர்.
மானாமதுரை ராம்நகர் பகுதியில் உள்ள தெருக்கள் சில மானாமதுரை நகராட்சியிலும்,மாங்குளம் ஊராட்சி கட்டுப்பாட்டிலும் உள்ளது. 50க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட சோலார் விளக்குகள் தற்போது எரியாமல் உள்ளதால் அப்பகுதி இருள் சூழ்ந்து திருட்டு அச்சத்தில் மக்கள் உள்ளனர். தெரு விளக்கு அமைக்க கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நகராட்சி அதிகாரி கூறியதாவது: விரிவாக்க பகுதியான இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைப்பதற்காக சர்வே செய்யப்பட்டு மின்வாரிய அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் திட்ட மதிப்பீடு வந்த பிறகு தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

