ADDED : டிச 27, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாச்சியாபுரம்: காரைக்குடி அரிமா சங்கம் மற்றும் ஹிரண்யா மெடிக்கல் பவுண்டேஷன் இணைந்து ரூ 70 ஆயிரம் மதிப்பிலான சோலார் பேனல் மற்றும் கணினி அச்சு இயந்திரத்தை பள்ளிக்கு வழங்கினர்.
பள்ளி வளர்ச்சி குழு செயலர் சோலையப்பன் வரவேற்றார். இந்திய செஞ்சிலுவை சங்க சிவகங்கை மாவட்ட தலைவர் சுந்தரராமன் பங்கேற்றார். ஹிரண்யா அறக்கட்டளை இயக்குனர் நாகம்மை சுரேஷ், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் டாக்டர் முத்தையா, லயன்ஸ் தலைவர் அருணாச்சலம், நிர்வாகிகள் நாகராஜன்,அசோகன்,கண்ணப்பன் வாழ்த்தினர். பள்ளி வளர்ச்சி குழு பொருளாளர் அய்யப்பன் நன்றி கூறினார்.

