தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சோலார் பேனல் பொருத்தும் பயிற்சி

 சோலார் பேனல் பொருத்தும் பயிற்சி

 சோலார் பேனல் பொருத்தும் பயிற்சி


ADDED : பிப் 19, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 05:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு சோலார் பேனல் பொருத்துதல் குறித்த பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: இச்சமூக இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. தாட்கோ மூலம் ரெட்டி நிறுவனத்துடன் இணைந்து, சோலார் பேனல் பொருத்துவது குறித்த தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சிக்கான வயது 18 முதல் 32 க்குள், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, தொழிற்பயிற்சி பட்டய படிப்பு, பொறியியல் படிப்பு அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சென்னையில் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். தங்கும் விடுதி, உணவு செலவினை ரெட்டி நிறுவனம் ஏற்கிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு அங்கீகார சான்று, மாதம் ரூ.18,000 முதல் 30,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும்.

பயிற்சிக்கு பின் சுய தொழில் துவங்க மானியத்துடன் வங்கி கடனுதவி வழங்கப்படும். பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள்' www.tahdco.com' இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us