/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சோலார் பிளான்ட் காவலாளி தீயில் பலி
/
சோலார் பிளான்ட் காவலாளி தீயில் பலி
ADDED : ஏப் 01, 2025 06:12 AM

திருப்புவனம்: திருப்புவனம் அருகேயுள்ள தனியார் சோலார் பிளான்ட் காவலாளி தீயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் 57, இரண்டு மகன்களுடன் திருப்புவனத்தில் வசித்து வந்தார். மடப்புரம் அருகே மஞ்சக்குடியில் உள்ள தனியார் சோலார் பிளான்டில் எட்டு வருடங்களாக காவலாளியாக பணி புரிந்தார்.
நேற்று மதியம்வளாகத்தில் உள்ள காய்ந்த புற்களுக்கு சிலர் தீ வைத்ததாகவும் அணைக்க சென்ற சேகர் அதில் சிக்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
உறவினர்கள் பூவந்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மானாமதுரை டி.எஸ்.பி., நிரேஷ் தலைமையில் பூவந்தி இன்ஸ்பெக்டர் கலைவாணி, திருப்புவனம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்.ஐ.,சிவப்பிரகாசம் ஆகியோர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரதுஉடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பூவந்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

