
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் கீரனுாரில் இளைய மகனை அடித்ததால் ஆத்திரமுற்ற தந்தை, மூத்த மகன் அருண்பாண்டி 24, தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
காளையார்கோவில் அருகே கீரனுார் கோடாங்கி மகன் ராணி 53. இவரது மனைவி இருளாயி 50. இவர்களது மகன்கள் அருண்பாண்டி, அஜித் 19, மகள் அபிராமி 21. ராணி சிவகங்கையில் உள்ள கடையில் பணிபுரிகிறார். அருண்பாண்டி மதுரை மாவட்டம் மேலுாரில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்தார். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு அவர் போதையில் வந்து தம்பி அஜித்திடம் 'ஏன் வேலைக்கு செல்லவில்லை 'எனக்கேட்டு அடித்துள்ளார். இதை தந்தை ராணி தடுத்துள்ளார்.
ஆத்திரம் தீராத ராணி ,வீட்டில் துாங்கிய அருண்பாண்டியின் தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்தார். அவரை காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, எஸ்.ஐ., குகன் கைது செய்தனர்.