ADDED : ஜூலை 07, 2026 09:00 PM
அ நிறம் | அளவு
பூலாங்குறிச்சி: பூலாங்குறிச்சி வ.செ.சிவ.அரசு கலைக்கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்துதல் பயிற்சி நடந்தது.
முதல்வர் ஆனந்தி தலைமை தாங்கினார். பழைய மாணவர் தியாகராஜன் போட்டித் தேர்வுகளின் முக்கியத்துவமும், அதற்கு தயாராகும் வழி முறைகளையும் விளக்கினார். பட்டதாரி ஆசிரியர் பழனிவேல் போட்டித் தேர்வுகளுக்கு வரலாற்று பாடத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். விரிவுரையாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
