ADDED : ஜூலை 16, 2025 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார: கல்லல் ஒன்றியம் தென்கரை வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கிராமத்தினர் கோரியுள்ளனர்.
தென்கரையில் புதன் தோறும் காலை வாரச்சந்தை நடைபெறும். அப்பகுதியில் விளையும் காய்கறிகளை வியாபாரிகள் இங்கு வந்து விற்கின்றனர். காலை 6:00 மணிக்கு துவங்கி மதியம் வரை நடைபெறும். அங்குள்ள மண் தரையில் கூடாரமிட்டு வியாபாரம் நடைபெறுகிறது.
இப்பகுதியில் இந்த ஒரு சந்தை மட்டுமே பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இங்கு எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் சுகாதாரமின்றி தரையில் வியாபாரம் நடக்கிறது. அதனால் இங்கு சிமென்ட் மேடை, நிழற் கூரை அமைக்கவும், கழிப்பறை வசதி ஏற்படுத்தவும் கிராமத்தினர் கோரியுள்ளனர்.

