/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எஸ்.பி., தனிப்பிரிவு டி.ஐ.ஜி., பாராட்டு
/
எஸ்.பி., தனிப்பிரிவு டி.ஐ.ஜி., பாராட்டு
ADDED : பிப் 12, 2026 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 5 ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தவர்களை கைது செய்ததற்காக எஸ்.பி., தனிப்பிரிவு போலீசாருக்கு டி.ஐ.ஜி., பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டத்தில் 2021 முதல் கொலை, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்த பொன்னையா மற்றும் பூச்சி விஜய்யை கைது செய்ததற்காக எஸ்.பி., தனிப்பிரிவு எஸ்.ஐ., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் 6 பேரை ராமநாதபுரம் டி.ஐ.ஜி., தேஷ்முக் சேகர் சஞ்சய் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

