/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொழிலாளர் நல வாரியத்தில் புதன் தோறும் சிறப்பு முகாம்
/
தொழிலாளர் நல வாரியத்தில் புதன் தோறும் சிறப்பு முகாம்
தொழிலாளர் நல வாரியத்தில் புதன் தோறும் சிறப்பு முகாம்
தொழிலாளர் நல வாரியத்தில் புதன் தோறும் சிறப்பு முகாம்
ADDED : நவ 09, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : ஆன்லைனில் பொருட்களை வினியோகம் செய்யும் ஊழியர்கள், தொழிலாளர் நல வாரியத்தில் வாரந்தோறும் புதனன்று பதிவு செய்யலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இதற்கான சிறப்பு முகாம் சிவகங்கை தொழிலாளர் நல உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு) அலுவலகத்தில் வாரந்தோறும் புதனன்று காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடைபெறும்.
தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், இயற்கை மரணம், பென்ஷன் உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கப்படும். இச்சிறப்பு முகாமை பயன்படுத்தி, தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும், என்றார்.