/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஜூலை 15 முதல் சிறப்பு திட்ட முகாம்
/
ஜூலை 15 முதல் சிறப்பு திட்ட முகாம்
ADDED : ஜூலை 07, 2025 07:11 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் ஜூலை 15 முதல் செப்., வரை அரசின் சிறப்பு திட்ட முகாம் 215 முகாம்களாக நடத்தப்படுகிறது.
அரசின் இச்சிறப்பு திட்ட முகாம் சிவகங்கை மாவட்டத்தில் மூன்று கட்டங்களாக நடக்க உள்ளது. ஒவ்வொரு வாரமும் நான்கு நாட்களில், நாள் ஒன்றுக்கு 6 முகாம்கள் வீதம் 215 முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். காரைக்குடி மாநகராட்சியில் 27, சிவகங்கை, தேவகோட்டை, மானாமதுரை நகராட்சியில் 31 முகாம், 11 பேரூராட்சிகளில் 22, ஊராட்சிகளில் 135 முகாம்கள் வீதம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
நகரங்களில் 13 துறைகளின் சார்பில் 43 சேவை, ஊராட்சிகளில் 15 துறைகள் சார்பில் 46 சேவைகள் வழங்கப்பட உள்ளன. இதில் சொத்து வரி, குடிநீர் வசதி லைசென்ஸ் மற்றும் அனுமதி, கழிவு நீர் இணைப்பு, அடிப்படை வசதிகள், பிறப்பு, இறப்பு சான்று, காலிமனையிட வரி, தெருவியாபாரிகள் அடையாள அட்டை, சொத்துவரி பெயர் மாற்றம், கட்டட அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் வழங்கப்படும்.
பட்டாவில் பெயர் மாற்றம், திருத்தம், பட்டா, சிட்டா நகல், பிறப்பு, இறப்பு, வாரிசு, ஜாதி, இருப்பிட சான்றுக்கான மனுக்களுக்கு முகாம் மூலம் உடனடி தீர்வு காணப்படும்.
மகளிர் உரிமை தொகைக்கான மனுக்களும் பெறப்படும். இச்சிறப்பு திட்ட முகாமை மக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

