ADDED : ஜன 25, 2025 07:05 AM
திருப்புத்துார் : திருப்புத்துார் கிறிஸ்துராஜா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நகரில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடந்தது.
நகரிலுள்ள பத்துப் பள்ளிகளிலிருந்து தலா இருவர்வீதம் 20 மாணவ,மாணவியர் போட்டியில் பங்கேற்றனர்.
இளநிலை பிரிவில், “நம் எண்ணமே நம் உயர்வு” என்ற தலைப்பிற்கான போட்டியில் பாத்திமா நடுநிலைப்பள்ளி மாணவி கவின் பாரதி முதல் பரிசு பெற்றார். தி.புதுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் அப்துல் ரஹிம் மற்றும் லிம்ரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் சையது கான் முகமது இரண்டாமிடத்தையும், நா.ம.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஹரினி டெஸ்மிதா மற்றும் தென்மாபட்டு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி அஸ்மிதா ஆகியோர் மூன்றாமிடத்தையும் வென்றனர்.
முதுநிலை பிரிவில் “உள்ளத்தில் துணிவிருந்தால் வானமும் நம் வசப்படும்” என்ற தலைப்பிற்கான போட்டியில் நா.ம.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹசீனா முதலிடத்தையும், பாபா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சுபானா பர்வீன்மற்றும் ஆ.பி.சீ.அ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீலிமதி இரண்டாமிடத்தையும், லிம்ரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி அஜிபா மார்ஷியா மற்றும் புதுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் வேல் முருகன் ஆகியோர் மூன்றாமிடத்தையும் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.