/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாணவர்களுக்கான பேச்சு போட்டி கள்
/
மாணவர்களுக்கான பேச்சு போட்டி கள்
ADDED : ஜூலை 22, 2025 03:44 AM

சிவகங்கை: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கென நடந்த பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பொற்கொடி பரிசு, சான்று வழங்கினார்.
சிவகங்கையில் மாவட்ட அளவில் நடந்த கல்லுாரி மாணவர் பேச்சு போட்டியில் முதலிடம் காரைக்குடி அழகப்பா அரசு கல்லுாரி மாணவர் நவீன், இரண்டாமிடம் அதே கல்லுாரி லெனின்குமார், மூன்றாம் பரிசு காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லுாரி மாணவர் ஹரிசங்கர் பரிசு பெற்றனர்.
பள்ளி மாணவர் போட்டியில் முதலிடம் கோட்டையூர் சி.சி., மகளிர் மேல்நிலை பள்ளி அபிநயா, இரண்டாம் இடம் சிவகங்கை மருது பாண்டியர் நகர் அரசு பள்ளி துர்க்காதேவி, மூன்றாம் பரிசு அரியக்குடி அரசு மேல்நிலை பள்ளி சிபின் ஜோஸ், சிறப்பு பரிசை திருப்புவனம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி ேஷாபனா, தி.புதுப்பட்டி அரசு உயர்நிலை பள்ளி அப்துல் ரகீம் பெற்றனர்.
மற்றொரு பேச்சு போட்டியில் கல்லுாரி மாணவர் பிரிவில் முதலிடம் காரைக்குடி அழகப்பா பி.எட்., கல்லுாரி லெனின்குமார், இரண்டாமிடம் புதுவயல் வித்யாகிரி கல்லுாரி முகமது கைப், மூன்றாமிடம் காரைக்குடி அழகப்பா அரசு கல்லுாரி அபிநயா பெற்றனர். இவர்களுக்கு பாராட்டு சான்றுடன் முதல் பரிசு தொகை ரூ.5000, 2ம் பரிசு ரூ.3000, 3ம் பரிசு ரூ.2000, சிறப்பு பரிசு தொகை ரூ.2000 பெற்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ சுரபி, தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமி பங்கேற்றனர்.