நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக் பாரத் அமைப்பின் சார்பில் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.
மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் தலைமை வகித்து போட்டியை துவக்கி வைத்தனர்.
போட்டியில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 8 அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளி சார்பாக 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் கலந்துகொள்வார்கள். இதில் தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக் பாரத் அமைப்பின் தலைவர் சரளா கணேஷ், துணைத் தலைவர் ரெஜினா, பொருளாளர் ஜெயசுதா கலந்து கொண்டனர்.