/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நாய்கள் விரட்டியதில் புள்ளிமான் இறப்பு
/
நாய்கள் விரட்டியதில் புள்ளிமான் இறப்பு
ADDED : ஜூலை 19, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் பாரதி நகர் குடியிருப்பு பகுதியில் நேற்று தண்ணீர் தேடி வந்த 2 வயது பெண் புள்ளி மான் ஒன்றை நாய்கள் விரட்டியது. பயந்து ஓடிய மான் அங்குள்ள முள்வேலியில் சிக்கி உயிருக்கு போராடியது. அப்பகுதி மக்கள் சிங்கம்புணரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் மான் இறந்தது.
மானின் உடலை கைப்பற்றிய தீயணைப்புத் துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு மானின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.