ADDED : ஜூன் 13, 2026 11:20 PM

அ நிறம் | அளவு
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டையில் புரவி எடுப்பு விழா நடந்தது.
இங்குள்ள படைத் தலைவி அம்மன் கோயில் அம்மன் எடுப்பு மற்றும் கறுக்குமடை ஐயனார் கோயில் புரவி எடுப்புத் திருவிழா காப்பு கட்டு தலுடன் தொடங்கியது.
8ம் நாளான நேற்று காலை படைத்தலைவி அம்மன் கோயில் முன் பாக எழுந்தருளினார். பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர். மாலை 6:30 மணிக்கு புரவி எடுப்பு நடந்தது.
2 அரண்மனை புரவிகள் உள்ளிட்ட 12 புரவிகள் புரவி பொட்டலுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இரவு பெண்கள் பூத்தட்டு எடுத்து வழிபாடு செய்தனர்.
இன்று மாலை புரவிகள் கறுக்குமடை ஐயனார் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.
