/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புனித மைக்கேல் அதிதுாதர் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
/
புனித மைக்கேல் அதிதுாதர் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
புனித மைக்கேல் அதிதுாதர் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
புனித மைக்கேல் அதிதுாதர் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : செப் 21, 2024 05:45 AM

சிவகங்கை: மானாமதுரை அருகேயுள்ள வே.மிக்கேல் பட்டணம் புனித மைக்கேல் அதிதுாதர் சர்ச் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பாதிரியார் சேவியர் அந்தோணி கொடியேற்றினார். வே.மிக்கேல்பட்டணம் பாதிரியார் சி.ஏ., ஜேம்ஸ் முன்னிலை வகித்தார். பங்கு இறை மக்கள், மதுரை, சிவகங்கை வாழ் பங்கு இறை மக்கள் பங்கேற்றனர். செப்., 28 அன்று சிறப்பு திருவிழா திருப்பலி மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. சிவகங்கை மறை மாவட்ட பிஷப் லுார்து ஆனந்தம் தலைமை வகிக்கிறார்.
அன்று இரவு 8:00 மணிக்கு புனித அதிதுாதர் தேர் பவனியும் நடைபெறும். செப்., 29 அன்று காலை 8:30 மணிக்கு மைக்கேல் தலைமையில் திருவிழா திருப்பலி, அன்று மாலை 6:00 மணிக்கு திவ்ய நற்கருணை பவனி, அதனை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும். விழா ஏற்பாடுகளை கிராம கமிட்டியினர் செய்து வருகின்றனர்.