ADDED : டிச 13, 2024 04:17 AM
அ நிறம் | அளவு
திருப்புவனம்: திருப்புவனத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவராக அப்துல்ஜப்பர், செயலாளராக சுதாகர், பொருளாளராக சதீஸ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பொதுக்குழுவில் 100 நாள் திட்டத்திற்கு தனியாக பி.டி.ஓ., நியமனம் செய்யப்படவேண்டும், புதிய ஊராட்சி ஒன்றியங்கள் அமைத்திட வேண்டும், ஊராட்சி செயலர்களுக்கான சம்பளத்தை கருவூலம் மூலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
