/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மண்பாண்ட தொழிலுக்கு இடையூறாக தேங்கும் மழை, கழிவு நீர்
/
மண்பாண்ட தொழிலுக்கு இடையூறாக தேங்கும் மழை, கழிவு நீர்
மண்பாண்ட தொழிலுக்கு இடையூறாக தேங்கும் மழை, கழிவு நீர்
மண்பாண்ட தொழிலுக்கு இடையூறாக தேங்கும் மழை, கழிவு நீர்
ADDED : ஏப் 15, 2025 05:50 AM

மானாமதுரை: மானாமதுரையின் அடையாளமாக கருதப்படும் மண்பாண்ட தொழிலுக்கு இடையூறு செய்யும் விதமாக தொழிற் கூடங்களுக்கு முன்பாக மழை, கழிவுநீர் தேங்குவதால் மண்பாண்ட தொழிலாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வருடம் தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருள்களை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்கள் தரமாகவும்,கலை நயத்தோடும் இருப்பதினால் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்கள் மட்டுமில்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
மண் கூஜாக்கள் மூலம் தண்ணீர் இயற்கையாக குளிரூட்டப்படுவதினால் அனைத்து தரப்பு மக்களும் கோடை காலத்தில் கூஜாக்களை வாங்கி செல்கின்றனர். பொங்கல் பண்டிகை, கார்த்திகை விழாக்களிலும் மானாமதுரை மண்பாண்ட பொருட்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
புவிசார் குறியீடு பெற்ற இத்தொழில் நிறுவனங்களுக்கு முன்பாக மழைக்காலத்தில் மழைநீர் தேங்குவதும், கழிவு நீரும் சேர்ந்து தேங்குவதால் மண்பாண்ட தொழிலாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.