/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உங்களுடன் ஸ்டாலின் முகாமால் பணிப்பளு: கண்டித்து வெளிநடப்பு
/
உங்களுடன் ஸ்டாலின் முகாமால் பணிப்பளு: கண்டித்து வெளிநடப்பு
உங்களுடன் ஸ்டாலின் முகாமால் பணிப்பளு: கண்டித்து வெளிநடப்பு
உங்களுடன் ஸ்டாலின் முகாமால் பணிப்பளு: கண்டித்து வெளிநடப்பு
ADDED : ஆக 13, 2025 02:08 AM
சிவகங்கை: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தால் பணிப்பளு அதிகரித்துள்ளதாக கூறி, தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று ஒரு மணிநேர வெளிநடப்பு போராட்டத்தை சிவகங்கையில் நடத்தினர்.
சிவகங்கையில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். இணை செயலாளர் வளன் அரசு கோரிக்கையை விளக்கி பேசினார். மாவட்ட நிர்வாகிகள் பாலமுருகன், புஷ்பவனம் பங்கேற்றனர்.
கிளை தலைவர் மாரிமுத்து நன்றி கூறினார்.
தேவகோட்டையில் சசிக்குமார், காரைக்குடியில் சந்திரன், திருப்புத்துாரில் ராஜா முகமது, சிங்கம்புணரியில் நாகநாதன், திருப்புவனத்தில் விவேக்ராஜா, மானாமதுரையில் முத்துராமலிங்கம், இளையான்குடியில் செல்வக்குமுார், காளையார்கோவிலில் சிவசெந்தில் ஆகியோர் தலைமையில் வெளிநடப்பு போராட்டம் நடந்தது.
சங்க மாநில துணை தலைவர் தமிழரசன் கூறியதாவது, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வாரத்திற்கு 4 நாட்கள் வரை செல்ல வேண்டியுள்ளது. முகாமிற்கு வரும் மனுக்களில் 90 சதவீதம் வருவாய்துறை சார்ந்தே உள்ளது.
வாரம் முழுவதும் முகாமிற்கு செல்வதால், தாசில்தார் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே முகாமை வாரம் இரண்டு நாள் மட்டும் நடத்த வேண்டும். மனுக்களுக்கான தீர்வு நாளை 90 ஆக அதிகரிக்க வேண்டும். அலுவலக உதவியாளர் காலிபணியிடம் நிரப்ப வேண்டும். பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைத்த 97 பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வெளிநடப்பு செய்தோம், என்றார்.