ADDED : பிப் 26, 2026 07:31 AM
அ நிறம் | அளவு
காரைக்குடி: கோவிலுார் நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், காரைக்குடி விஷ்வா சதுரங்கப்பள்ளி மற்றும் பெஸ்ட் மூவ் சதுரங்க கழகம் சார்பில் செஸ் போட்டி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது.
செட்டிநாடு அரவிந்த் பரிசு வழங்கினார். நாச்சியப்ப சுவாமிகள் கல்லுாரி முதல்வர் கலா கலந்து கொண்டார். சிவகங்கை மாவட்ட சதுரங்க கழக செயலாளர் கண்ணன் வரவேற்றார். பெஸ்ட் மூவி சதுரங்க கழக செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
