ADDED : நவ 11, 2024 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவிலில் தமிழ்நாடு உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். நிறுவன தலைவர் மாயவன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். மாநில பொது செயலாளர் ஜெயக்குமார் அறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் விஜயசாரதி நிதிநிலை அறிக்கை வாசித்தார். சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் முத்துச்சாமி நன்றி கூறினார்.