தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பழுதாகி நின்ற அரசு ஏசி பஸ்

பழுதாகி நின்ற அரசு ஏசி பஸ்

பழுதாகி நின்ற அரசு ஏசி பஸ்


UPDATED : செப் 23, 2026 04:09 PM

ADDED : செப் 23, 2026 02:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2026 04:09 PM ADDED : செப் 23, 2026 02:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை:மதுரை,ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் மானாமதுரை வழியாக இயக்கப்படும் சொகுசு குளிர்சாதன பஸ்கள் அடிக்கடி பழுதாகி ஆங்காங்கே வழியில் நிற்பதால், பயணிகள் சிரமப்படுகின்றனர். மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. நீண்ட துார பயணத்தை கருத்தில் கொண்டு பலர் கூடுதல் கட்டணம் செலுத்தி

குளிர்சாதன வசதியுடைய அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணம் செய்கின்றனர். மானாமதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள்

அடிக்கடி பழுதாகி சாலையோரங்களில் நிற்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

பஸ் பழுதாகும் நேரங்களில், பயணிகளை வேறு சாதாரண பஸ்களில் ஏற்றி அனுப்பும்

நிலை ஏற்படுகிறது. குளிர்சாதன பஸ்களுக்கான கட்டணத்தை முழுமையாக செலுத்திய பயணிகள்,

சாதாரண பஸ்களில்

பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அந்த பஸ்களில் ஏற்கனவே அதிகளவில் பயணிகள் இருப்பதால், இருக்கை கிடைக்காமல் நீண்ட துாரம் நின்றபடியே பயணம் செய்ய

வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது.

அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் கூறியதாவது:

அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் பஸ்களை முறையாக பராமரிப்பதற்குத்

தேவையான உதிரிபாகங்கள் ் இருப்பதில்லை. போதிய மெக்கானிக்,பணியாளர்

இல்லாததால், சிறிய பழுது ஏற்பட்ட பஸ்களைக்கூட முழுமையாக சரிசெய்ய முடியாத

நிலை உள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us