ADDED : டிச 13, 2025 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: தென்கரை மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி சி.பி.எஸ்.இ.பள்ளி மாணவர்கள் மாநில அறிவியல் கண்காட்சி, திட்டப் போட்டியில் வெற்றி பெற்றனர்.
கோவில்பட்டி தேசிய பொறியியல் கல்லுாரியில் நடத்தப்பட்ட போட்டியில் மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி பள்ளி 11-ம் வகுப்பு மாணவர் சுபகவின் 'விரிவாக்க யதார்த்தம் அடிப்படையிலான கல்வி பயன்பாடு' என்ற திட்டத்தையும், 12-ம் வகுப்பு மாணவி ஜேன் ப்ரீத்தி ஜெயபாரதன் 'ஆஸ்துமா நோயாளிகளுக்கான ஸ்மார்ட் துாசி கண்டறியும் அமைப்பு' என்ற திட்டத்தையும் வழங்கினர்.
இவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றனர்.
அமைச்சர் கோவி செழியன் பரிசு வழங்கினார். தாளாளர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன் மற்றும் விவியன் ரேச்சல் ஜெய்சன் பரிசு வழங்கி கவுரவித்தனர்.

