ADDED : பிப் 17, 2025 07:00 AM
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் மாநில அளவில் கல்லுாரிகளுக்கு இடையிலான முத்தையா அம்பலம் நினைவு வாலிபால் போட்டி நடந்தது.
முதல் காலிறுதி போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி 2 - 0 புள்ளிகளில் சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லுாரியை வீழ்த்தியது. 2வது காலிறுதியில் கோவை கற்பகம் பல்கலை 2 - 0 புள்ளிகளில் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலையை வீழ்த்தியது.
3வது காலிறுதியில் சென்னை லயோலா கல்லுாரி 2 - 0 புள்ளிகளில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரியை வீழ்த்தியது. 4வது காலிறுதியில் பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி 2 - 1 புள்ளிகளில் திருச்சி ஜமால் முகமது கல்லுாரியை வீழ்த்தியது.
லீக் முறையில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் லயோலா கல்லுாரி முதலிடம், கற்பகம் பல்கலை 2ம் இடம், அமெரிக்கன் கல்லுாரி 3ம் இடம், ஸ்ரீசரஸ்வதி தியாகராஜா கல்லுாரி 4ம் இடம் பெற்றன.
மதுரை விமான நிலைய சுங்கம் மற்றும் ஜி.எஸ்.டி., கண்காணிப்பாளர் ராஜலிங்கம் பரிசு வழங்கினார்.
முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், துணைமுதல்வர் மார்ட்டின் டேவிட், நிதிக் காப்பாளர் பியூலா ரூபி கமலம் பங்கேற்றனர்.
விளையாட்டு துறைத்தலைவர் பாலகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார்.

