/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாநில மகளிர் வாலிபால் லீக் : எஸ்.டி.ஏ.டி மகளிர் அணி வெற்றி
/
மாநில மகளிர் வாலிபால் லீக் : எஸ்.டி.ஏ.டி மகளிர் அணி வெற்றி
மாநில மகளிர் வாலிபால் லீக் : எஸ்.டி.ஏ.டி மகளிர் அணி வெற்றி
மாநில மகளிர் வாலிபால் லீக் : எஸ்.டி.ஏ.டி மகளிர் அணி வெற்றி
ADDED : ஏப் 18, 2025 11:56 PM
சென்னை:
மாநில அளவில் நடந்த, மகளிர் வாலிபால் லீக் போட்டியில், எஸ்.டி.ஏ.டி மகளிர் அணி, பனிமலர் அணியை வென்றது.
புதுவயலில் 'பிரன்ட்ஸ் வாலிபால் கிளப்' சார்பில், மாநில ஆண் மற்றும் பெண்களுக்கான வாலிபால் போட்டி நடந்து வருகிறது.
இதில் எஸ்.டி.ஏ.டி., தமிழ்நாடு போலீஸ் மகளிர் அணி உட்பட தமிழகத்தை சேர்ந்த 6 பெண்கள் அணி பங்கேற்றுள்ளது. முதல் லீக் போட்டியில் பனிமலர் அணியை, எஸ்.டி.ஏ.டி மகளிர் அணி 25-17, 25-18 என்ற புள்ளி அடிப்படையில் வென்றது.
மற்றொரு போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணியை செந்துறை மகளிர் அணி 18 - 25,17 - 25 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.
ஆண்கள் போட்டி
ஆடவருக்கான போட்டியில், எம்.பி.வி.சி., தமிழ்நாடு போலீஸ் அணி உட்பட தமிழகத்தை சேர்ந்த 6 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று முன்தினம் நடந்த போட்டியில், எம்.பி.வி.சி., அணி, கஸ்டம்ஸ் அணியை 20-25, 23-25, 25-23, 25-16,19-17 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வென்றது. மற்றொரு போட்டியில் எ.எஸ்.எம் அணி, தமிழ்நாடு போலீஸ் அணியை 25-22,25-20,25-18 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

